யாழ் ஊடகவியலாளர்களுக்கு 30 000 கொடுத்த டக்ளஸ்!

1 Min Read

யாழ் ஊடகவியலாளர்களுக்கு 30 ஆயிரம் கொடுத்த டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஊடகவியலாளர்கள் சிலர் கடந்த சித்திரை புத்தாண்டு அன்று EPDP யின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை அவரது யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு கைவிசேட பணம் என தலா 30 000 வழங்கியுள்ளார். இதன் போது தமக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு குறித்த ஊடகவியலாளர்களால் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சித்திரை புத்தாண்டு மறுநாள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு 20 க்கும் மேற்பட்ட யாழ் ஊடகவியலாளர்கள் டக்ளஸ் தேவானந்தாவை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

கவிதை பாடி பரிசு வாங்குவது அந்தக்காலம் பணம் வாங்கி புகழ்ந்து செய்தி போடுவது இந்தக்காலம் என முப்பதாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர்கள் டக்ளஸ் தேவானந்தாவை புகழ்ந்து செய்தி எழுதி வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரசியல் வாதி ஒருவரின் பத்திரிகையில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் 30 000 ரூபாய் பெற்றுக்கொண்ட நிலையில் குறித்த ஊடக நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.